உலகளவில் 1.8 பில்லியன் முஸ்லிம்களைக் கொண்ட இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாகும். அதன் வேர்கள் மேலும் பின்னோக்கிச் சென்றாலும், அறிஞர்கள் பொதுவாக இஸ்லாத்தின் உருவாக்கம் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதுகின்றனர், இது உலகின் முக்கிய மதங்களில் இளையதாக ஆக்குகிறது. முஹம்மது நபி (ஸல்) வாழ்ந்த காலத்தில் இன்றைய சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் இஸ்லாம் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் நம்பிக்கை வேகமாக பரவி வருகிறது.
"இஸ்லாம்" என்ற சொல்லுக்கு "கடவுளின் விருப்பத்திற்கு அடிபணிதல்" என்று பொருள்.
இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
முஸ்லிம்கள் ஏகத்துவவாதிகள் மற்றும் அனைத்தையும் அறிந்த கடவுளை வணங்குகிறார்கள், அரபு மொழியில் அல்லாஹ் என்று அழைக்கப்படுகிறார்.
இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அல்லாஹ்வின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால் மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
அல்லாஹ்வின் வார்த்தைகள் முஹம்மது நபி (ஸல்)க்கு வான தூதர் ஜிப்ரீல் (அலை) மூலம் வெளிப்படுத்தப்பட்டதாக இஸ்லாம் போதிக்கிறது.
அல்லாஹ்வின் சட்டத்தை போதிக்க பல தூதர்கள் அனுப்பப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), மூஸா (அலை), மற்றும் ஈஸா (அலை) என அனைத்து தூதர்களை அவர்கள் மதிக்கிறார்கள். முஹம்மது (ﷺ) இறுதி தூதர் ஆவார்கள்.
மசூதிகள் முஸ்லிம்கள் வழிபடும் இடங்கள்.
மக்காவில் உள்ள காஃபா, ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மற்றும் மதீனாவில் உள்ள முஹம்மது நபியின் மசூதி ஆகியவை சில முக்கியமான இஸ்லாமிய புனித இடங்களாகும்.
குர்ஆன் இஸ்லாத்தின் முக்கிய புனித நூல். ஹதீஸ் மற்றொரு முக்கியமான புத்தகம்.
முஸ்லிம்கள் குர்ஆனை ஓதி அல்லாஹ்வை வணங்குகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள் இருக்கும் என்றும், மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
முஹம்மது (ﷺ)
நபியின் பிறப்பு: மக்காவில். யானை ஆண்டு, ரபீயுல் அவ்வல் 9, ( ஏப்ரல் 22, கி.பி. 571) அவருடைய தந்தை அப்துல்லாஹ் நபிகளார் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
வயது 2: பாலூட்டுவதற்காக செவிலித் தாயார் ஹலீமா அல்சாதியா குழந்தை முஹம்மதைக் கொண்டு சென்றார்.
வயது 6: அவருடைய தாய் ஆமினா குழந்தை முஹம்மதை யத்ரிபுக்கு(இன்று மதீனா) அழைத்துச் சென்றார். மக்காவுக்குத் திரும்பி வரும் வழியில் அப்வா எனுமிடத்தில் தாய் காலமானார். சிறுவரைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பாட்டனார் அப்துல் முத்தலிப் ஏற்றுக்கொண்டார்கள்.
வயது 8: பாட்டனார் அப்துல் முத்தலிப் மறைந்தார்கள். முஹம்மதின் பெரிய தந்தை அபூதாலிப் அவரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். இந்தப் பாதுகாப்பும் பராமரிப்பும் அடுத்து வரக்கூடிய 42 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
வயது 10: ஆடுகள் மேய்த்தார்கள்.
வயது 12: பெரிய தந்தையுடன் இணைந்து பசராவுக்குப் பயணம் சென்றார். அங்கு பஹிரா எனும் கிறிஸ்தவத் துறவி சிறுவர் முஹம்மதிடம் நபித்துவத்துக்கான அடையாளங்கள் இருப்பதைக் கண்டுகொண்டார். உடனே பெரிய தந்தையிடம் சிறுவரை சிரியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், அங்கு யூதர்களால் அவருக்கு ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தினார். ஆகையால் அவர் மக்காவுக்குத் திரும்பிவிட்டார். முஹம்மது (ஸல்) ஃபிஜார் போரில் கலந்துகொண்டார். ஹில்புல் ஃபுளுல் எனும் அமைதிக் குழுவில் இணைந்து பணியாற்றினார்.
வயது 25: மக்காவிலுள்ள வணிகச் சீமாட்டி கதீஜா அம்மையாரின் வணிகச் சரக்குகளுடன் அவர்கள் சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்கள். பயணத்திலிருந்து திரும்பியதும் அவர் கதீஜா அம்மையாரை மணந்துகொண்டார்கள். கதீஜா அம்மையாருக்கு அப்போது வயது 40.
வயது 35: குறைஷிகள் கஅபா ஆலயத்தை மறுகட்டமைப்புச் செய்தனர். கறுப்புக் கல்லைப் பொருத்தும் விஷயத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் சிக்கலை மிகவும் புத்திக் கூர்மையுடன் தீர்த்து வைத்தார்கள்.
வயது 39 ½: அவர்கள் உண்மையான கனவுகளைக் கண்டார்கள். அவர்கள் காணும் கனவுகள் எல்லாம் மிகத் தெளிவானவையாக இருந்தன.
வயது 40: நபித்துவத்தின் முதல் ஆண்டு ரமலான்(கி.பி. 610, ஆகஸ்ட்) வானவர் ஜிப்ரீல் (அலை) முதல் திருச்செய்தியை (வஹி) ஏந்தி வந்தார்கள். மக்காவிலிருந்து சற்று தொலைவில் இருந்த ஹிரா எனும் குகையில் குர்ஆனின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டன.
உடல்தூய்மை (உளு) எப்படிச் செய்வது என்பதையும் தொழும் முறையையும் ஜிப்ரீல் (அலை) கற்றுத் தந்தார்கள். தொழுதும் காட்டினார்கள். ஆறு மாதங்களுக்குப் பின்னர் இரண்டாவது திருச்செய்தி வந்தது. அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தின் முதல் ஏழு வசனங்கள் அருளப்பட்டன. அத்துடன் நபித்துவப் பணியும் தொடங்கிவிட்டது.
முதலில் நம்பிக்கை கொண்டவர்கள் அபூபக்கர் (ரலி), கதீஜா (ரலி), ஜைது பின் ஹாரிஸ் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி) (பெரிய தந்தையின் மகன்) நபித்துவத்தின் முதல் மூன்று ஆண்டுகள்: நபிகளார் இரகசியமாக மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார்கள். மக்காவாசிகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். நான்காம் ஆண்டு: வெளிப்படையாகப் பரப்புரை செய்யும்படி இறைவனிடமிருந்து கட்டளை வந்தது. சபா மலைக் குன்றில் ஏறி நபிகளார் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்கள். அதைக்கேட்டு அவருடைய உறவினரான அபூஜஹல் எரிச்சல் அடைந்தான். பிலால் (ரலி), யாசிர் (ரலி), சுமைய்யா (ரலி), அம்மார் (ரலி), கத்தாப் (ரலி) போன்ற ஆதரவற்ற முஸ்லிம்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டன. யாசிரும் சுமைய்யாவும் கொல்லப்பட்டனர். வீர மரணம் அடைந்தனர்.
ஐந்தாம் ஆண்டு: பன்னிரண்டு முஸ்லிம் ஆண்களையும் நான்கு முஸ்லிம் பெண்களையும் எத்தியோப்பியாவிற்குப் புலம்பெயர்ந்து செல்ல நபிகளார் அனுமதித்தார்கள். அவர்களில் நபிகளாரின் மகள் ருக்கையாவும் அவருடைய கணவர் உஸ்மானும் இருந்தனர். அதைத் தொடர்ந்து இன்னும் 83 ஆண்களும் 19 பெண்களும் எத்தியோப்பியாவுகுப் புலம்பெயர்ந்து சென்றனர். குறைஷிகள் மன்னர் நஜாஷியிடம் ஒரு தூதுக்குழுவை அனுப்பி புலம்பெயர்ந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டினர். ஆனால் அது நடக்கவில்லை.
ஆறாம் ஆண்டு: நபிகளாரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு, உமரும் (ரலி) முஸ்லிமானார்கள். நபிகளாருடன் இணைந்து கஅபாவில் வெளிப்படையாய் வழிபடத் தொடங்கினர்.
குறைஷிகள் அபூதாலிபிடம் வந்து உம்மாரா பின் வாலித் என்பவருக்குப் பகரமாக நபிகளாரைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் அவரைத் தாங்கள் கொல்லப் போவதாகவும் கூறினர். அபூதாலிப் மறுத்துவிட்டார்கள்.
ஏழாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டு வரை: குறைஷிகள் நபிகளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். அபூதாலிப் பள்ளத்தாக்கில் மிகவும் மோசமான நிலையில் முஸ்லிம்கள் மூன்று ஆண்டுகளைக் கழித்தனர்.
பத்தாம் ஆண்டு: சமூகப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது. இதற்கு ஆறுமாதங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து அபூதாலிபும் பிறகு கதீஜாவும் மரணமடைந்தனர். இந்த ஆண்டு “துயர ஆண்டு” என்று குறிப்பிடப்படுகிறது.
நபிகளாரும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர். நபிகளார் ஒரு சூனியக்காரர், மந்திரவாதி, குறி சொல்பவர், பைத்தியக்காரர், கவிஞர் என்றெல்லாம் சற்றும் பொருத்தமற்ற வகையில் அவர்மீது குறைஷிகள் வசைமாரி பொழிந்தனர். உகாஸ், மஜ்னானா, துல் மஜாஸ் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று நபிகளார் தம் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். நிலவைப் பிளக்கச் செய்து பேரற்புதத்தையும் செய்து காட்டினார். அவர் தாயிபுக்கும் சென்றார். ஆனால் அங்கும் அவருக்கு மோசமான வரவேற்புதான் கிடைத்தது. திரும்பும் வழியில் அவருக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது. குர்ஆன் ஓதுவதைச் செவியுற்ற ஜின்களின் ஒரு கூட்டம் நபிகளாரின் மீது நம்பிக்கை கொண்டது. மக்காவின் உயர் வணிகரான முத்இம் பின் அதீ என்பவர் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததைத் தொடர்ந்து நபிகளார் மக்கா திரும்பினார். ரஜப் 27 அன்று இரவு நபிகளார்ஜெரூசலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டார்(இஸ்ரா, மிஃராஜ்). இந்தப் பயணத் தின்போதுதான் ஐந்துவேளை தொழுகை இறைவனால் கடமையாக்கப்பட்டது.
கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஆறுபேர் முஸ்லிமானதைத் தொடர்ந்து மதீனாவில் இஸ்லாம் வளரத் தொடங்கியது.
பதினோராம் ஆண்டு: துல்ஹஜ் முதல் அகபா உடன்படிக்கை: மதீனாவைச் சேர்ந்த 12 பேர் முஸ்லிமானார்கள். அவர்கள் இஸ்லாமிய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி அளித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக நபிகளார் முஸ்அப் இப்னு உமைரை அவர்களுடன் அனுப்பிவைத்தார்.
பன்னிரண்டாம் ஆண்டு: துல்ஹஜ் இரண்டாம் அகபா உடன்படிக்கை: எழுபது ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட ஒரு குழுவினர் இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டு, நபிகளாருடன் உறுதியான ஒப்பந்தமும் செய்துகொண்டனர். அவர் மதீனா வந்தால் எல்லாவகையிலும் அவரைப் பாதுகாப்பதாக உறுதி அளித்தனர்.
பதிமூன்றாம் ஆண்டு: நபிகளாரின் அறிவுரைக்கேற்ப மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லத் தொடங்கினர். ஆரம்பத்தில் சென்றவர்களில் உமர், சுஹைப் ஆகியோரும் இருந்தனர்.
நபிகளார் புலம்பெயர்தல்: (27, ஸஃபர்) குறைஷிகள் நபிகளாரைக் கொல்லத் திட்டம் தீட்டினர். அவருடைய வீட்டை முற்றுகை இட்டனர். ஆனால், அல்லாஹ்வின் அருளால் எதிரிகளின் கண்களில் படாமல் நபிகளார் வெளியேறிவிட்டார். பிறகு தம் தோழர் அபூபக்கருடன் தவ்ர் எனும் குகையில் மூன்று இரவுகள் தங்கியிருந்தார். பிறகு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர்.
இரண்டாவது பகுதி இஸ்லாமிய வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கால கட்டமாகும் .
மக்காவில் முஸ்லிம்கள் குறைந்த தொகையினரே வாழ்ந்தனர் . அப்போது அவர்கள் காபிர்களின் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தனர் . இஸ்லாமிய பிரசாரப் பணிக்கு பல தடைகள் ஏற்பட்டிருந்தன .
மதீனாவிலோ இதற்கு மாறான சூழ்நிலை காணப்பட்டது . மதீனா மக்காவுக்கு வடக்கே 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயப் பூமியாகும் . இது முதலில் யத்ரிப் எனும் பெயரால் அழைக்கப் பட்டது . இங்கு அவுஸ் , கஸ்ரஜ் என்ற இரு கோத்திரங்கள் வாழ்ந்து வந்தன . கூடவே யூதர்களும் வாழ்ந்தனர் . இவ்விரு கோத்திரங்களுக்கு மத்தியில் நல்லுறவு காணப்படவில்லை . அவர்களுக்கிடையில் யூதர்கள் சண்டையை மூட்டிக் கொண்டிருந்தமையே இதற்கான காரணமாகும் . ஒரு முறை கஃபாவைத் தரிசிக்கச் சென்ற மதீனாவாசிகள் சிலர் நபி (ﷺ) அவர்களை இரகசியமாக சந்தித்தனர் , இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் . இவர்கள் மூலமாக மதீனாவில் படிப்படியாக இஸ்லாம் பரவ ஆரம்பித்தது . பின்னர் நபி (ﷺ) அவர்களை மதீனாவுக்கு வரும்படி அவர்கள் அழைப்புவிடுத்தனர் . அல்லாஹ்வின் உத்தரவின்படி நபி (ﷺ) அவர்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டார்கள் .மதீனா மக்கள் , நபி (ﷺ) அவர்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் . இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . ஆரம்பத்தில் யத்ரிப் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் நபியவர்களின் ஹிஜ்ரத்திற்குப் பின்னர் ‘ மதீனதுன் நபி ” என பெயர் பெற்றது . மதீனா என்பதன் கருத்து நகரம் என்பதாகும் . நகரத்தில் மக்கள் அதிகமாக வசிப்பர் . இதனால் அங்கு சமூகமும் அரசாங்கமும் காணப்படும் . நபி (ﷺ) அவர்கள் மதீனாவுக்குச் சென்றதும் முதலில் சமூக அமைப்பைக் கட்டியெழுப்பினார்கள் .
• முஸ்லிம் சமூகத்தின் மத்திய நிலையமாக அமையும் வகையில் மஸ்ஜிதுன் நபவியை நிர்மாணித்தார்கள் .
• மக்காவிலிருந்து அங்கு சென்ற முஹாஜிர்களையும் மதீனாவாசிகளான அன்ஸாரீன்களையும் சகோதரர் களாகப் பிணைத்தார்கள் .
• பல வருட காலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அவுஸ் - கஸ்ரஜ் கோத்திரத்தவர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள் .
• மதீனாவில் வாழ்ந்த யூதர்களுடனும் மதீனாவைச் சூழவுள்ள ஏனைய கோத்திரங் களுடனும் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொண்டார்கள் .
இதன் பயனாக நபி (ﷺ) அவர்களின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு வாழும் ஒரு சமூகம் உருவானது . சுதந்திரமாக மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது . இதனால் கூட்டான இபாதத்துகள் விதியாக்கப்பட்டன .
அவ்வாறான சில
• ஜுமுஆ , ஜமாஅத் தொழுகைகள் விதியாக்கப்பட்டன .
• • தக்வாவை வளர்க்க நோன்பு கடமையாக்கப்பட்டது .
• ஏழைகளுக்கு உதவ ஸகாத் கடமையாக்கப்பட்டது .
• • சமூகம் தொடர்பான ஒழுக்கங்கள் விதியாக்கப்பட்டன .
• சமூகத்துக்குத் தேவையான சட்டவிதிகளும் நடைமுறைகளும் வகுத்துக் கொடுக்கப்பட்டன .
• • சமூகத்தை பாதுகாப்பதற்காக ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டது .
இதனால் சிறந்த தனிமனிதர்கள் உருவானார்கள் . நல்ல குடும்பங்கள் தோற்றம் பெற்றன . குற்றம் செய்யாத , குற்றம் செய்யத் தயங்கிய , குற்றம் செய்தால் உடனே மன்னிப்போ , தண்டனையோ பெற்றுக்கொள்ள விரும்பிய ஒரு நல்ல சமூகம் உருவாக்கப்பட்டது . அங்கு எல்லோரும் சகோதரர்களாகக் காணப்பட்டார்கள் . உயர்ந்தவர் , தாழ்ந்தவர் , அறபி , அஜமி ,உள்நாட்டவர் - வெளிநாட்டவர் என்ற வேறுபாடு நோக்கப்படவில்லை .
அவ்வாறு வேறுபாடு காட்டியவர்களை நபியவர்கள் கண்டித்தார்கள் . அவ்வாறே எல்லோருக்கும் சமஉரிமை வழங்கப்பட்டது . மற்றவர்களின் உரிமையில் தலையிடுபவர்கள் அல்லது மற்றவர்களுக்குரிய உரிமையை வழங்காதவர்கள் கண்டிக்கப்பட்டார்கள் . சிலபோது தண்டிக் கப்பட்டார்கள் .
குர்ஆன் , ஸுன்னா மூலம் சமூகத்துக்கான சட்டங்கள் வரையறுக்கப்பட்டன . அவையாவன :
* குடும்பவியல் சட்டங்கள்
* * குற்றவியல் சட்டங்கள் - ஜினாயத்
* நிகாஹ் - தலாக் தொடர்பான சட்டங்கள் - முனாகஹாத்
* * வாரிசுரிமை அல்லது பாகப் பிரிவினை தொடர்பான சட்டங்கள் - வராஸத்
* கொடுக்கல் - வாங்கல் தொடர்பான சட்டங்கள் - முஆமலாத்
சட்டங்களை பாதுகாத்தல் நடைமுறைப்படுத்தல் தண்டனை வழங்கல் முதலிய பணிகளை அரசாங்கம் செய்து வந்தது . நபி (ﷺ) அவர்கள் உருவாக்கிய சமூகத்தையே நாம் ஸஹாபாக்கள் சமூகம் என அழைக்கின்றோம் . அல்லாஹ் அல்குர்ஆனின் மூலம் வழங்கிய போதனைகளை நடைமுறைப்படுத்திக் காட்டியவர்கள் அவர்களே ஆவர் . அவர்கள் தாம் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகள் ; இன்றுவரை முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருவதற்கு அடித்தளமாக அமைந்தவர்கள் .
இஸ்லாத்தின் ஐந்து தூண்கள்
முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கைக்கு அவசியமான ஐந்து அடிப்படைத் தூண்களைப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் அடங்கும்:
ஷஹாதா: கடவுள் மீதான நம்பிக்கையையும் முஹம்மது (ﷺ) மீதான நம்பிக்கையையும் அறிவிப்பது.
சலாத்: ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்வது. (ஃபஜ்ர் , ளுஹர் , அஸர் , மஃரிப் , இஷா)
ஜகாத்: சேமித்த சொத்து ஒரு வருடம் முழுக்க செலவாகாமல் வைத்திருந்தால் அதிலிருந்து 2.5% ஏழைகளுக்கு கொடுப்பது.
சவ்ம்: ரமலான் நோன்பு
ஹஜ்: ஒரு நபரால் முடிந்தால் அவரின் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறை மக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது.
இன்று இஸ்லாம்
சமீபத்திய ஆண்டுகளில், பயங்கரவாதம் மற்றும் படுகொலைகளுடன் இஸ்லாத்தின் தொடர்பு பல நாடுகளில் அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது. "தீவிர இஸ்லாம்" என்ற சர்ச்சைக்குரிய சொல் வன்முறைச் செயல்களுடன் மதத்தின் தொடர்பை விவரிக்க நன்கு அறியப்பட்ட லேபிளாக மாறியுள்ளது.
சில முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த தங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்தினாலும், பெரும்பான்மையானவர்கள் அதை நியாயப்படுத்தவில்லை. உண்மையில், முஸ்லிம்கள் அடிக்கடி வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.
முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றிய தவறான எண்ணங்களைத் துடைப்பதை நோக்கமாகக் கொண்டாலும், மதம் வேகமாகப் பரவி வருகிறது. இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இந்த நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் கிறிஸ்தவத்தை மிஞ்சி மிகப்பெரிய மதமாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment